போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..!

0 2079
போகிப் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்..!

தமிழகத்தில் போகிப் பண்டிகையையொட்டி, அதிகாலையில் வீட்டில் இருந்த பயனற்ற பொருட்களை எரித்தும், மேளங்களை அடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப, பொங்கலுக்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் போகிப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்திரன் முதலியோரை வணங்கி, திருப்தி செய்யும் நாள் இந்த நாள்.. ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் போகிப் பண்டிகையை வீடுகள்தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.

வீட்டை சுத்தம் செய்து, வீட்டிலிருக்கும் தேவையற்ற பொருட்களை தீயிட்டுக் கொளுத்துவது காலம் காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்து வருகிறது.

இன்று அதிகாலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றி டயர் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை தீயிட்டு கொளுத்தாமல், மரக்கட்டை அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தி காற்றை மாசுபடுத்தாமல் கொண்டாடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments