பறவைக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் மனிதர்களுக்கு தற்போது பரவும் ஆபத்து குறைவு: மருத்துவ நிபுணர்கள் தகவல்

பறவைக் காய்ச்சலை பரப்பும் வைரஸ் மனிதர்களுக்கு தற்போது பரவும் ஆபத்து குறைவு: மருத்துவ நிபுணர்கள் தகவல்
பறவைக் காய்ச்சலை ஏற்படுத்தும் H1 வைரஸ் பறவைகளிடம் இருத்து மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்றாலும் தற்போது அதற்கான ஆபத்து குறைவாகவே இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பறவைக் காய்ச்சல் 9 மாநிலங்களில் உறுதிப்படுத்தப்பட்டாலும், அது நாடு முழுதும் பரவ வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் கணித்துள்ளனர். போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கின நோய் ஆராய்ச்சிக் கழகத்தின் நிபுணர்கள் வெளிநாட்டு பறவைகள் வலசை போகும் மூன்று முக்கிய சர்வதேச வழத்தடங்களின் கீழ் இந்தியா உள்ளதால், இந்த வைரஸ் பரவலுக்கு ஆளாவதை தடுப்பது சிரமம் என தெரிவித்துள்ளனர்.
2004 ல் முதன்முறையாக பறவைக்காய்ச்சல் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இதுவரை 24 முறை அந்த தொற்று ஏற்பட்டுள்ளது.
Comments