பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என டிரம்ப் அறிவிப்பு..!

அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை என டிரம்ப் அறிவிப்பு..!
அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்கும் விழாவில் தான் பங்கேற்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக் கொள்ளாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றக் கட்டடத்தில் புகுந்து நடத்திய வன்முறை உலக அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையொட்டி டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், வரும் 20ம் தேதி நடக்கும் விழாவிற்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 150 ஆண்டு கால வரலாற்றில் புதிய அதிபரின் பதவியேற்பைப் புறக்கணிக்கும் முதல் முன்னாள் அதிபராக டிரம்ப் கருதப்படுவார்.
Comments