போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளான விவகாரம் : அபராதம், இழப்பீடு செலுத்த அமெரிக்க நீதித்துறையுடன் போயிங் உடன்பாடு

போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளான விவகாரம் : அபராதம், இழப்பீடு செலுத்த அமெரிக்க நீதித்துறையுடன் போயிங் உடன்பாடு
போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் அபராதம், இழப்பீடு உள்ளிட்ட வகைகளில் 18 ஆயிரத்து 346 கோடி ரூபாயைச் செலுத்த போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
2018ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலும், 2019ஆம் ஆண்டில் எத்தியோப்பியாவிலும் போயிங் 737 MAX வகையைச் சேர்ந்த விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாயின.
இந்த விபத்துக்களில் மொத்தம் 346 பேர் உயிரிழந்தனர். போயிங் மீது லாப நோக்கத்தில் நிறுவனத்தின் குறைபாடுகளை மறைக்க முயன்றதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில் சட்ட நடவடிக்கையைத் தவிர்க்க மொத்தம்18 ஆயிரத்து 346 கோடி ரூபாயைச் செலுத்த நீதித்துறையிடம் போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக மூவாயிரத்து 670 கோடி ரூபாய் செலுத்தப்படும்.
Comments