சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி... முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட்
சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. 2 ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கிய நிலையில், அபாரமாக ஆடிய ஸ்டீவன் ஸ்மித் தனது 27வது சதத்தை பூர்த்தி செய்தார்.
131 ரன்கள் எடுத்த ஸ்மித் ரன் அவுட் ஆகி வெளியேறிய நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து முதலாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியுள்ளது.
Comments