3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்... உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்ப்பு

0 2296
3வது கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்... உணவு இடைவேளை வரை 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் சேர்ப்பு

சிட்னி நகரில் நடைபெற்று வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில், உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249  ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது.

2வதுநாளான இன்று லபுஸ்சேன் 91 ரன்களும், மாத்யூ வடே 13 ரன்களும்,காமரூன் கிரீன் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஸ்டீவன் சுமித் 76 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இந்திய தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், சைனி மற்றும் பும்ரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments