நடிகர் விஜய்யின் இரு ரகசியங்கள்..! முன்னாள் தலைவர் திடுக் தகவல்

0 46602
நடிகர் விஜய்யின் இரு ரகசியங்கள் ..! முன்னாள் தலைவர் திடுக் தகவல்

டிகர் விஜய்க்கும் தனக்கும் மட்டும் தெரிந்த ரகசியங்கள் தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக, விஜய் மக்கள் இயக்க முன்னாள் தலைவர் ரவிராஜா வெளியிட்டுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை விட்டு வெளியேற்ற காவல் நிலையத்தில் விஜய் புகார் அளித்த நிலையில் கடிதத்தை ரவிராஜா வெளியிட்டுள்ளார்.

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகரனின் நிறைவேறாத கனவாய் போன அ.இ.த.வி.ம.இ கட்சியில் பொறுப்பு வகிக்கப்போவதாக வெளியான தகவலால், நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர் ரவிராஜா..!

விஜய் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே எஸ்.ஏ. சந்திர சேகரனின் சீதா, நண்பர்கள் இன்னிசைமழை உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் டிசைன் செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்த ரவிராஜாவை, நாளையதீர்ப்பு படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்து செயலாளராக்கியவர் எஸ்,ஏ. சந்திர சேகரன்.

தொடர்ந்து விஜய் மன்றம் மக்கள் இயக்கமானது வரை 28 ஆண்டுகளாக இயக்க பொறுப்புகளில் இருந்தவர் ரவிராஜா. கவுரவ தலைவராக இருந்த புதுச்சேரியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்து, அகில் இந்திய விஜய் மக்கள் இயக்கத்துக்கு பொறுப்பாளரான பின்னர் அவருக்கு எதிராக ரவிராஜா செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் விஜய்க்கே தெரியாமல் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆரம்பித்த அ.இ.த.வி.ம.இ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ரவிராஜா, கன்னியாகுமரியில் புஸ்ஸி ஆனந்தால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை ஒன்று திரட்ட இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மக்கள் இயக்க பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதுடன், இனி பனையூர் அலுவலகத்திற்கும் வரக்கூடாது என்று விஜய் தரப்பில் ரவிராஜாவுக்கு கட்டளையிடப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதிய ரவிராஜா, தன்னை வரவேண்டாம் என்று கூறினாலும் சம்பளம் வந்து கொண்டிருக்கிறது ஆனால் 23 வருடங்களாக தான் பெற்று வந்த கிறிஸ்துமஸ் போனஸ் வரவில்லை என்று தொடங்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்,

அதில் விஜய்யின் திருமண அழைப்பிதழ் தொடங்கி பைரவா படம் வரை அத்தனை போஸ்டர் டிசைன்களும் தான் செய்தது என்று குறிப்பிட்டுள்ள ரவிராஜா, தவறு செய்திருந்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு இருப்பேன் தவறு செய்யவில்லை அதனால் தங்கள் விருப்பபடி வீட்டை காலி செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு முன்பாக தங்களுக்கும், எனக்கும் மட்டும் தெரிந்த 2 விசயங்களையும், உங்களுக்கு தெரியாத 2 விஷயங்களையும், ஆதாரமான சில புகைப்படங்களையும் , தங்களிடம் காண்பிக்க வேண்டும், அது விசயமாக பேச வேண்டும், நேரில் சந்தித்து பேச 5 நிமிடம் வாய்ப்பு தாருங்கள் என்று ரவிராஜா , நடிகர் விஜய்க்கு அனுப்பி உள்ள கடிதத்தில் பணிவுடன் குறிப்பிட்டுள்ளார்.

ரவிராஜா குறிப்பிட்டுள்ளபடி இருவருக்கு மட்டும் தெரிந்த அந்த ரகசியம் என்ன? அது தொடர்பான புகைபட ஆதாரங்கள் வைத்திருக்கிறார் என்றால் அது என்னவாக இருக்கும் ? என்ற எதிர்பர்ப்பு திரை உலகினர் மத்தியின் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கின்றது.

அதே நேரத்தில் ரவிராஜாவையும், குமார் என்பவரையும் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து காலி செய்ய கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் , விஜய்யின் ரகசியம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதத்தை ரவிராஜா வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments