புதுச்சேரியில் மதுபானம் வாங்கிவிட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட கும்பல்... கடை ஊழியருக்கு அரிவாள் வெட்டு
புதுச்சேரியில் தனியார் மதுபான கடையில் மது வாங்கிவிட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட கும்பல், கடை ஊழியர்களை அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள மதுபான கடைக்கு நேற்றிரவு வந்த 3 பேர் மது வாங்கிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பணத்தை கொடுக்கும் படி கேட்ட காசாளரை அந்த கும்பலை சேர்ந்த ஒருவன் அரிவாளை கொண்டு தாக்கியுள்ளான். தடுக்க முயன்ற ஊழியர் ராஜவேலுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதனையடுத்து, கல்லா பெட்டியில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், தாக்குதல் நடத்திய மூன்று பேரையும் கைது செய்தனர்.
Comments