இமாச்சலத்தில் கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிப்பு - சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

இமாச்சலத்தில் கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவுகளால் சாலைகள் துண்டிப்பு - சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
இமாச்சலப் பிரதேசம் மணாலியில் கடும் பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் சுற்றுலா சென்ற சுமார் 500 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
புதிதாகத் திறக்கப்பட்ட அடல் சுரங்கசாலை உள்பட பல்வேறு சாலைகளில் பனிமூடிய சாலையில் செல்ல முடியாமல் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
இதையடுத்து உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சாலைகளில் மூடிய பனி அகற்றப்பட்டது.
இரவு 8 மணிக்கு டூன்டி எனுமிடத்தில் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு டாக்சி மற்றும் பேருந்துகளில் குலாங் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரவில் சில மணி நேரம் தடைபட்ட மீட்புப் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Comments