திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக வைகோ அறிவிப்பு

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார்.
தொகுதி பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை என வைகோ தெரிவித்தார்.வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தபோது, வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
Comments