மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டம் : தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்

0 818

புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான கோப்பிற்கு, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

அப்போது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி அவர்கள் உள்ளே நுழைய சென்றதால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை மாணவர்கள் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து மாணவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்‍. போராட்டத்திற்கு காரணமான 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments