ம.நீ.ம. ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகள் அனைவருக்கும் அரசு ஊதியம் - கமல்ஹாசன்

இல்லத்தரசிகள் அனைவருக்கும் அரசு ஊதியம் உள்ளிட்ட 7 அம்சத் திட்டத்தை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இல்லத்தரசிகள் அனைவருக்கும் அரசு ஊதியம் உள்ளிட்ட 7 அம்சத் திட்டத்தை கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேரப்போவதில்லை என்றும், கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தேரடி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட கமலுக்கு, குமரக்கோட்டம் முருகன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால் கமல் அதை ஏற்க மறுத்து விட்டு சால்வை மட்டும் அணிந்து கொண்டார்.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு சென்ற கமல், பிள்ளையார் பாளையம், கீழ் அம்பி உள்ளிட்ட பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்கு சென்றார்.
Comments