இங்கிலாந்தில் மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ள கொரோனா... விமானங்களை நிறுத்த முடிவு

0 2131
இங்கிலாந்தில் மீண்டும் புதிய வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி சீல் வைக்கவும், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களை நிறுத்த முடிவு செய்துள்ளன.

ங்கிலாந்தில் பரவி வரும் புதிய ரக கொரோனா வைரசால் நாட்டுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகிற 31 ஆம் தேதி வரை இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸில் புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து, பெல்ஜியம்,ஆஸ்திரியா,சுவீடன்,பின்லாந்து, சுவிட்சர்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, பல்கேரியா, ருமேனியா, குரோஷியா,துருக்கி,ஈரான், இஸ்ரேல்,சவுதி அரேபியா,குவைத்,எல் சால்வடார், அர்ஜென்டினா, சிலி மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் பிரிட்டனுடனான அனைத்து வித போக்குவரத்திற்கும் தடை விதித்துள்ளன. 

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழு அளவில் அறிந்துள்ளது என்றார். மக்கள் அச்சப்பட வேண்டாம் என்ற அவர், கற்பனையான சூழலை நினைத்துக் கொண்டு கற்பனை கலந்த அச்சத்தில் மக்கள் ஆழ்ந்து போக வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார். கடந்தபல மாதங்களாக மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்த முறையும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார். 

இதனிடையே இங்கிலாந்துடனான விமான போக்குவரத்து வருகிற 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகிற 22 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் அந்நாட்டின் வழியாக வரும் விமானங்களில் பயணித்து இந்தியா வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments