கேரள மாநிலம் கொச்சியில் நடிகையிடம் வரம்பு மீறி நடந்த இரண்டு இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை

0 4039
கேரள மாநிலம் கொச்சியில் நடிகையிடம் வரம்பு மீறி நடந்த இரண்டு இளைஞர்கள் மீது போலீசார் நடவடிக்கை

கேரள மாநிலம் கொச்சியில், நடிகையிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட இரண்டு இளைஞர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்கள் வாங்கச் சென்றிருந்தபோது, தன்னைப் பின்தொடர்ந்த இரண்டு இளைஞர்கள் பின்பக்கமாக வந்து ஆபாசமான முறையில் உடலைத் தொட்டதாக நடிகை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையடுத்து தாமாகவே விசாரணையை மேற்கொண்ட போலீசார், கண்காணிப்பு கேமரா மூலம் முகக்கவசம் அணிந்த குற்றவாளிகளை கண்டுபிடித்தனர்.

இரண்டு இளைஞர்களும் சரண் அடைவார்கள் என்று அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments