நாட்டாம தீர்ப்ப மாத்து…! ஈரோடு சவுந்தர் காலமானார்..!

0 16606

சிம்மராசி படத்தின் இயக்குனரும், நாட்டாமை படத்தின் கதை வசனகர்த்தாவுமான சினிமா எழுத்தாளர் ஈரோடு சவுந்தர் உடல் நலகுறைவால் காலமானார் 

ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் வெளிவந்த நாட்டாமை படத்தின் ஆரம்ப காட்சி தொட்டு இறுதி காட்சி வரை கொங்கு தமிழில், இவர், எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் காலம் கடந்தும் பேசப்படக்கூடியவை..

முதல் சீதனம், சிம்மராசி ஆகிய படங்களையும் இயக்கிய ஈரோடு சவுந்தர், சமுத்திரம் படத்திற்கு கதை வசனம் எழுதியதோடு, தசாவதாரம், லிங்கா உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார். அண்மையில் அய்யா உள்ளேன் அய்யா என்ற பெயரில் தனது பேரனை வைத்து படம் இயக்கி வந்த ஈரோடு சவுந்தர் சிறு நீரகப் பாதிப்ப்புக்குள்ளாகி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஈரோடு சவுந்தர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவரது இறுதி சடங்கு நாதகவுண்டன் பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கொங்கு தமிழ் வசனங்களால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றும் அவரது மறைவிற்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments