கர்நாடகாவில் லவ் ஜிகாத், பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்-கர்நாடக துணை முதலமைச்சர்

0 997
கர்நாடகாவில் லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் லவ் ஜிகாத் மற்றும் பசுவதைக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் பல்லப்காரில் (Ballabgarh)கல்லூரிக்கு வெளியே நின்ற மாணவி ஒருவர், அக்டோபர் மாதம் இளைஞர் ஒருவரால் சுட்டு கொல்லப்பட்டார்.

திருமணம் செய்ய மதமாற மாணவி மறுத்ததால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்காக கட்டாயமாக மதமாற்றுவதை தடுக்க அவசர சட்டம் அண்மையில் பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல் மத்திய பிரதேச மாநில அரசும், கட்டாயபடுத்தி மேற்கொள்ளப்படும் மதமாற்றத்தை தடுக்க சட்டம் கொண்டு வர போவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக துணை முதலமைச்சரும், மசோதாக்கள் கொண்டு வரப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments