ரஜினிகாந்த் முதலில் கட்சியாக பதிவு செய்யட்டும், பின்னர் கருத்து கூறலாம் - முதலமைச்சர்

0 5344
ரஜினிகாந்த் முதலில் கட்சியாக பதிவு செய்யட்டும், பின்னர் கருத்து கூறலாம் - முதலமைச்சர்

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சியை தொடங்கி பதிவு செய்த பின்னர் அதுகுறித்து கருத்து தெரிவிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கொரோனா தடுப்பு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் 27 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கியதுடன், 65 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறை சார்ந்த திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற பணிகளை தொடங்கியும் வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 14,500 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி-குண்டாறு திட்டத்திற்கு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்படும் என்றார். செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மோகன் குமாரமங்கலம் ஆகிய மூன்று தலைவர்களின் முழு உருவப்படம் சட்டமன்றத்தில் நிறுவப்படும் என்று அறிவித்தார்.

பட்டியலினத்தில் உள்ள 7 உட்பிரிவு சாதிகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ரஜினி கட்சியை முதலில் பதிவு செய்யட்டும் அதன்பின் அதுபற்றி பேசலாம் என்று பழனிச்சாமி பதிலளித்தார். ரஜினி கட்சி தொடங்குவதை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் வரவேற்றது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments