ஏரியில் விவசாயிகள் விட்ட காகித கப்பல்..! புதிய போராட்ட வழிமுறை

0 2673

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அரியலூர் விவசாயிகள் காகிதக் கப்பல் விட்டு நூதன போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் விவசாயச் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் டிராக்டருடன் டெல்லிக்குள் புகுந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, அரியலூரில் இருந்து புறப்பட்ட விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் அனுமதியின்றி சாமர்த்தியமாக எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்தனர். வயல்காட்டிற்குச் சென்ற விவசாயிகள், அங்கு நின்று கோஷம் எழுப்பினர்.

மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், தங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி, அதனை காகிதக்கப்பல் போன்று ஏரி நீரில் மிதக்கவிட்டனர்.

விவசாயிகள் போராட்டத்திற்கு மதிப்பளித்து மத்திய அரசு அவர்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments