அவனுக்கு இவள் 2 வது இவளுக்கு அவன் 3 வது..! 4 வதாக கிடைத்த கத்திக்குத்து

0 18221

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே, இரண்டாவது காதலனை ஏமாற்றிவிட்டு மூன்றாவது காதலனுடன் பைக்கில் சென்ற பெண்ணின் மீது, மிளகாய்ப் பொடியைத் தூவி கத்தியால் குத்திய, இரண்டாவது காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த சுந்தரராஜனின் மனைவி பத்மா. திருமணத்திற்குப் பின்னரும் காதல் மீது தீராத ஈர்ப்பு கொண்ட பத்மா, சங்ககிரி அடுத்த சாமியாம்பாளையத்தைச் சேர்ந்த அன்பரசு என்பவரை காதல் வலையில் வீழ்த்தினார். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பத்மா, ஏற்கனவே திருமணமான அன்பரசுவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாடகைக்கு வீடு எடுத்து நடத்திய தனிக்குடித்தனம் மூன்றே மாதத்தில் கசந்ததால், 2 வது கணவன் அன்பரசுவை தவிக்க விட்டு பத்மா பறந்து சென்றார். மூன்றாவதாக தமிழ்செல்வன் என்பவரை தனது காதல் வலையில் வீழ்த்திய பத்மா அவருடன் சென்றுவிட்ட நிலையில், ஏமாற்றிச்சென்ற பத்மா - தமிழ்ச்செல்வனுடன் ஜோடியாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்ததைக் கண்டு அன்பரசு ஆவேசமானதாகக் கூறப்படுகின்றது.

சம்பவத்தன்று சாமியாம் பாளையத்திலிருந்து கத்தேரி பகுதிக்கு தமிழ்ச்செல்வனுடன் பத்மா பைக்கில் சென்றதைக் கண்ட அன்பரசு, இருவரையும் மிளகாய்ப் பொடியை தூவி வழிமறித்தார். உக்கிரமாக இருந்த அன்பரசுவைக் கண்டு சுதாரித்துக்கொண்ட தமிழ்ச்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட, கையில் சிக்கிய ரன்னர் காதலி பத்மாவை மடக்கிப் பிடித்து கத்தியால் சரமாரியாகக் குத்தியதாக கூறப்படுகின்றது. கத்தியுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார் அன்பரசு.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேவூர் போலீசார், கத்தியால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த பத்மாவை மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு பத்மாவுக்கு முதலுதவி சிகிச்சையளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அன்பரசை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலர் விட்டு மலர் தாவும் வண்டு போல காலத்திற்கு ஏற்ப காதலனை மாற்றியதால் பத்மாவுக்கு கத்திக் குத்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வீட்டில் தாலிகட்டிய மனைவி இருக்க புதிதாக ஜோடி தேடிச்செல்லும் மன்மதன்கள் நிம்மதியை இழந்து தவிக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments