சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

0 7124

மிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் வரை 610 ரூபாய் ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் 50 ரூபாய் உயர்ந்து 660 ரூபாயாக உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 62 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.  வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் 1,293 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments