வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாவதன் எதிரொலி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

0 1312
வங்கக் கடலில் புதிதாக புயல் உருவாவதன் எதிரொலி : கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக, தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, நாகர்கோவிலில் சிறப்பு அவசரகால கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு, புயல் பாதிப்பு தகவல்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை, வெள்ளத்தில் சிக்குபவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க 82 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, 76 பகுதிகள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணைகளின் நீர் மட்டமும் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments