அமெரிக்காவில் கடற்கரைக்கு வந்த அரியவகை ஆமை மீட்பு

0 2798
அமெரிக்காவில் கடற்கரைக்கு வந்த அரியவகை ஆமை மீட்பு

அமெரிக்காவில் கரை திரும்பி உயிருக்குப் போராடிய அரியவகை ஆமையை விலங்கியல் ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்டனர்.

மாசாசூசெட்ஸ் பகுதியில் உள்ள கேப் கோட் கடல் பகுதியில் பிரமாண்டமான ஆமை ஒன்று கரை ஒதுங்கியதையடுத்து, உயிரியல் ஆய்வாளர்கள் அது தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த ஆமை, லாக்கர்ஹெட் என்ற அரிய ஆமை என்பது தெரியவந்தது. சுமார் 160 கிலோ எடை கொண்ட அந்த ஆமைக்கு கடும் குளிர் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக அதனை ஆய்வகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments