ஆஸ்திரியாவில் பிரேக் டேன்ஸ் உலக சாம்பியன்ஸ் போட்டி : ஜப்பான் இளைஞர், ரஷ்ய இளம்பெண் சாம்பியன்

0 563
ஆஸ்திரியாவில் பிரேக் டேன்ஸ் உலக சாம்பியன்ஸ் போட்டி : ஜப்பான் இளைஞர், ரஷ்ய இளம்பெண் சாம்பியன்

ஆஸ்திரியாவில் நடைபெற்ற பிரேக் டேன்ஸ் நடன உலக சாம்பியன்ஸ் (Breakdance world champions) போட்டியில் ஜப்பான் இளைஞர் சிஹிகிக்சும் (Shigekix), ரஷ்ய இளம்பெண் காஸ்டெட்டும் (Kastet) வெற்றி பெற்றனர்.

ஆடவர் இறுதி சுற்றில், ரஷ்யாவின் அல்கோலிலும் (Russia's Alkolil), ஜப்பானின் சிஹிகிக்சும் பங்கேற்றனர்.

இருவரும் ஒருவருக்கொருவர் பிரேக் டேன்சில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க தலையை ஊன்றியும், ஒற்றை கையை ஊன்றியும் பல்வேறு நடன அசைவுகளை வெளிபடுத்தினர்

முடிவில் ஜப்பானின் சிஹிகிக்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதேபோல் மகளிர் போட்டியில் காஸ்டெட் வெற்றி பெற்று தொடர்ந்து 2ஆவது ஆண்டாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments