சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மேலும் ஒருவர் கைது

0 1481
சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மேலும் ஒருவர் கைது

சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் ஏற்கனவே, காவல் ஆய்வாளர், பா.ஜ.க. பிரமுகர், ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வறுமையை காரணம் காட்டி சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அச்சிறுமியின் உறவுக்கார பெண் சகிதாபானு, அவரது காதலன் மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

இடைத்தரகர்கள் மூலம் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக பாஜக பிரமுகர் ராஜேந்திரனும், அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் சிக்கினர்.

மேலும் சில அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, மருத்துவர் என பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், பா.ஜ.க. பிரமுகர் ராஜேந்திரனின் நண்பரான வினோபாஜி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள வினோபாஜி தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments