திரிணமூல் காங்கிரசை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 7 பேர் பாஜகவில் சேர உள்ளதாக பாஜக எம்பி சவுமித்ரா கான் பரபரப்பு தகவல்

திரிணமூல் காங்கிரசை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் 7 பேர் பாஜகவில் சேர உள்ளதாக பாஜக எம்பி சவுமித்ரா கான் பரபரப்பு தகவல்
திரிணமூல் காங்கிரசை சேர்ந்த எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 7 பேர் விரைவில் ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைய உள்ளனர் என்ற தகவல் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களில் சுப்ரதா முகர்ஜி, கவுதம் தேப், ரபிந்திரநாத் கோஷ் ஆகியோர் மம்தா அரசில் அமைச்சர்களாக உள்ளனர்.
எனவே இந்த தகவலால் அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கிறது. சவுமித்ரா கான் (Saumitra Khan) என்ற பாஜக எம்பி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஆனால் பாஜகவில் சேர உள்ளதாக வெளியான தகவலை சம்பந்தப்பட்ட நபர்கள் மறுத்துள்ளனர்.
Comments