' அது ஒன்றுதாங்க எங்களுக்கு அடையாளம்!'- சுலோச்சன முதலியார் பாலத்தில் பெருமையுடன் நடந்து சென்ற வாரிசுகள்

0 73263
சுலோச்சன முதலியார் பாலம்

நெல்லைக்கு அடையாளமாக விளங்குவது சுலோச்சன முதலியார் பாலம். தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த பாலம் நெல்லை பாளையங்கோட்டை நகரங்களை இணைக்கிறது. பாலம் கட்டுவதற்கு முன்பு பரிசல்களில்தான் மக்கள் இந்த பகுதியை கடந்து சென்று கொண்டிருந்தனர்.  கடந்த 1840 ஆம் ஆண்டு நெல்லை ஆட்சியராக இருந்த தாம்சன் இங்கு பாலம் கட்ட முடிவு செய்தார். அதே வேளையில், நிதி இல்லை. அப்போதுதான், சுலோசனா முதலியார் தன் மனைவியின் நகைகள் , சொத்துகளை விற்று முதலில் ரூ. 40. 000 அடுத்து 8,500 என்று நன்கொடையாக அளித்தார்.

இத்தனைக்கும் சுலோச்சன முதலியாரின் பூர்வீகம் நெல்லை அல்ல. காஞ்சிபுரம் மாவட்டம் திருமணம் என்ற ஊர்தான் அவரின் பூர்வீகம். ஆனாலும், நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்தில் கொளரவ பணியாக சிரஸ்தாராக இருந்தார். இதனால்,  குடும்பம் நெல்லையிலேயே தங்கி விட்டது. சுலோச்சன முதலியார் கொடுத்த நிதியால் கட்டப்பட்ட அந்த பாலம் 1843 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வந்தது. பாலத்துக்கு அவரின் பெயரே சூட்டப்பட்டது. இதற்காக, ஆட்சியர் தாம்சன் சுலோசனா முதலியாருக்கு செப்பு பட்டயம் ஒன்றை வழங்கியிருந்தார். பாலத்திலும் அவரின் பெயரே பதிக்கப்பட்டது. தற்போது, அந்த செப்புப்பட்டயத்தை சுலோச்சன முதலியாரின் வாரிசு பக்தவச்சலம் என்பவர் பாதுகாத்து வருகிறார்.image

சமீபத்தில் பாலம் கட்டப்பட்டு 178 ஆம் ஆண்டு தொடக்க விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுலோசனா முதலியாரின் பேரன் பக்தவச்சலம்( வயது  63) அவரது மனைவி கமலா, மகள் கிருத்திகா, கமலாவின் தம்பி ரமணன் ஆகியோர் முதன் முறையாக பங்கேற்றனர்.திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு, அவர்களுக்கு சால்வை அணிவித்தார். நிகழ்ச்சியில், பாலம் குறித்த சி.டி., வெளியிடப்பட்டது. பிறகு,  பாலத்தில் சுலோச்சன முதலியாரின் வாரிசுகள் பெருமையுடன் நடந்து சென்று தாமிரபரணி ஆற்றை ரசித்தனர். 

சுலோச்சன முதலியாரின் தந்தை ராமலிங்க முதலியார்  வீரபாண்டிய கட்ட பொம்மன் மற்றும் பானர்மேன் இடையே மொழி பெயர்ப்பாளராக இருந்தவர். திருமணம் கிராமத்தை சேர்ந்த செல்வந்தர் குடும்பம். தந்தையின் பணிக்காக, நெல்லை குடி பெயர்ந்தனர்.

சுலோச்சன முதலியாரின் 6வது தலைமுறை பேரனான பக்தவச்சலம் கூறுகையில்,''கடந்த 1964 வரை திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் வசித்தேன் .சொந்த ஊரான திருமணம் சென்று விட்டோம். திருக்கழுக்குன்றத்தில் தபால் நிலையத்தில் பணியாற்றுகிறேன்.வாடகை வீட்டில் வசிக்கிறோம். மகள் கிருத்திகா எம்.ஏ., படித்துள்ளார். மகளுக்கு அரசுப்பணி கிடைத்தால் உதவியாக இருக்கும் '' என்றார்.

பக்தவச்சலத்தின் மனைவி கமலா கூறுகையில், எங்க வீட்டுக்கு வந்த ஒருத்தர் 10 லட்சம் ரூபாய் தர்றேன்.அந்த தாமிரப் பட்டயத்தை கொடுங்க எனக் கேட்டார்.தர மறுத்து விட்டோம்.அவரது வாரிசு என்பதற்கு ஒரே ஆதாரம் இதுதானே .இந்த பாலத்தோட ஒரிஜினல் வரைபடத்தைக்கூட கரையான் அரிக்காமல் பாதுகாத்து வந்தோம்" என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments