பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அரசின் வேண்டுகோளை ஏற்க மறுப்பு... டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

0 2249
பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்த அரசின் வேண்டுகோளை ஏற்க மறுப்பு... டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம்

பேச்சு நடத்த அழைப்பு விடுத்த மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லியை நோக்கிப் படையெடுத்துள்ளனர். அவர்களை டெல்லிக்குள் அனுமதிக்க முதலில் மறுத்த காவல்துறை, பின்னர் புராரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதித்தது.

ஆனால், அதை ஏற்க மறுத்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கும் வரை டெல்லி எல்லைகளில் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்க மறுத்த விவசாயிகள் திக்ரி, சிங்கு, காசிப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments