செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்குப் பின் அகற்றம்

0 14259
செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்குப் பின் அகற்றம்

செம்பரம்பாக்கம் ஏரியின் மதகில் சிக்கிய செடிகொடிகள் கடும் முயற்சிக்குப் பின் அகற்றப்பட்டன.

ஏரியில் இருந்து 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி கடந்த புதனன்று முழுவதும் நிரம்பியதால் அதிலிருந்து அதிகப்பட்சமாக நொடிக்கு 9 ஆயிரம் கனஅடி வரை உபரி நீர் திறந்து விடப்பட்டது.

4 நாட்களாக மழை இல்லாமல் நீர்வரத்து குறைந்ததால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டது. நீர் வெளியேறும் மதகுகளில் செடிகொடிகள் சிக்கி அடைத்துக் கொண்டன.

இதனால் மிகப்பெரிய மிதவையை ஏரியில் இறக்கி அதில் பொக்லைன் எந்திரத்தை வைத்து மதகுப் பகுதிக்குக் கொண்டுசென்று செடிகொடிகளை அகற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments