ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி இறைச்சி...!

0 8426

மதுரை, உசிலம்பட்டியில் ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி கறி வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டதையடுத்து, ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்த மக்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறைச்சிக்கடை நிறுவனம், பேரையூர் ரோட்டில் புதிய கிளையை இன்று திறந்தது.

பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியில் கோழி இறைச்சிக்கடை கிளை திறப்பு விழா சலுகையாக, ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி கறி வழங்கப்படும் என்று போஸ்டர் அடித்து உசிலம்பட்டி முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று திறப்புவிழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க அங்கு குவிந்தனர். 

இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த போலிசார் போக்குவரத்தை சீர் செய்து, மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

ஒரு சிலரிடம் மட்டுமே இந்த ஐந்து பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்த்து, பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையால், நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் குவிந்தது இன்னும் கிராம மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments