கொடிய விஷம் கொண்ட பூரானின் கடியில் இருந்து நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தாய்

0 4696
கொடிய விஷம் கொண்ட பூரானின் கடியில் இருந்து நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தாய்

தாய்லாந்தில் கொடிய விஷம் கொண்ட பூரானின் கடியில் இருந்து நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய தாயின் வீடியா வெளியாகி உள்ளது.

தலைநகர் பாங்காக்கில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வயதுக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. குழந்தையின் தாயோ அதனருகிலேயே படுத்துக் கொண்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு அடி நீளம் கொண்ட பூரான் குடும்பத்தைச் சேர்ந்த கொடிய விஷம் கொண்ட சேடன் என்ற பூச்சி வந்தது.

குழந்தையின் மிக அருகில் வந்தபோது, அதனைக் கவனித்த தாய் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையைத் தூக்கிக் காப்பாற்றினார். பின்னர் அந்த சேடன் அடித்துக் கொல்லப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments