கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் இணைந்து நேர்மையுடன் செயல்படுவதாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் தகவல்

கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் இணைந்து நேர்மையுடன் செயல்படுவதாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் தகவல்
கிழக்கு லடாக்கில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் இணைந்து நேர்மையுடன் செயல்படுவதாக சீனா கூறி உள்ளது.
பீஜிங்கில் காணொலி காட்சி வழியாக பேட்டி அளித்த ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர், சீன, இந்திய படைகளின் தளபதி மட்டத்திலான 8-வது சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லை பகுதிகளின் நிலைமை ஒட்டுமொத்தமாக நிலையாக உள்ளது என்றார்.
பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து சீனாவும், இந்தியாவும் படைகளை விலக்கிக்கொள்ள நேர்மையான, ஆழமான தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பை பேணி வருவதாக கூறினார்.
இரு தரப்பு படைகளும் எல்லையில் கட்டுப்பாட்டை உறுதி செய்து வருவதாகவும், தவறான புரிந்து கொள்ளுதலும், தவறான கணக்கீடும் தவிர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராணுவ, ராஜதந்திர வழிகளில் இந்திய தரப்புடன் தொடர்புகளை பேண சீனா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
Comments