ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சிட்னியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் ஆரோன் பிஞ்ச் 114 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 105 ரன்களும் விளாச, 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் சேர்த்தது.
375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் மயங்க் அகர்வால், விரோட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிகபட்சமாக பாண்டியா 90 ரன்களும், ஷிகார் தவான் 74 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.
Comments