கங்கனா குறித்து பேச எனக்கு நேரமில்லை, விரும்பவில்லை- உத்தவ் தாக்கரே

கங்கனா குறித்து பேச எனக்கு நேரமில்லை, விரும்பவில்லை- உத்தவ் தாக்கரே
கங்கனா ரணாவத் குறித்து பேச விரும்பவில்லை என்று மகாராஷ்டிரா முதலமைச்சரும், சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை நகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல மாறிவிட்டதாக கங்கனா கூறிய கருத்தால், அவருக்கும் மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சிக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.
இந்நிலையில் சாம்னா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது கங்கனா குறித்து உத்தவிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், கங்கனா குறித்து பேச தனக்கு நேரமில்லை என்றார். மும்பைக்கு எதிரான கங்கனாவின் கருத்து பற்றிய கேள்விக்கு, இது மும்பை மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை என்று பதிலளித்தார்.
Comments