மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் ஆரம்பம்- வி.கே.யாதவ்

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் அமைக்கும் பணிகள் ஆரம்பம்- வி.கே.யாதவ்
குஜராத்தில் புல்லட் ரயில் திட்டம் முடிவடைந்தவுடன் சென்னை-மைசூர் உள்பட மேலும் 7 வழித் தடங்களில் புல்லட் ரயில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்-மும்பை இடையே 24ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதன் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தேசிய விரைவு ரயில் போக்குவரத்து கழகம் மற்றும் லார்சன் அண்ட் டியூப்ரோ இடையே கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவ் 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.
Comments