குஜராத்: கொரோனா சிகிச்சை மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் தீ விபத்து; 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஒருவர் கவலைக்கிடம்

0 953
குஜராத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் ஐ.சி.யு.வில் தீ விபத்து; 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஒருவர் கவலைக்கிடம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

தீ விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட நோயாளிகள் தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஏற்பட்ட தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments