சென்னையில் ஒரிரு இடங்களில் நில அமைப்பின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

0 1113
சென்னையில் ஒரிரு இடங்களில் நில அமைப்பின் காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சென்னையில் வேளச்சேரி ராம் நகர், புளியந்தோப்பு போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இயற்கையாக அமைந்த நில அமைப்பின் காரணமாக நீர் வடியாமல் தேங்கியுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் தண்ணீர் தேக்கம் முழுவதுமாக அகற்றப்படும் என அவர் கூறினார்.

பொதுமக்களிடம் இருந்து 302 புகார்கள் வந்ததில், 132 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாக ஆணையாளர் கூறினார். சுமார் 4000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளுமே தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments