சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன - போக்குவரத்திற்கு தடை

0 4342
சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன - போக்குவரத்திற்கு தடை சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் - காவல்துறை மறு உத்தரவு வரும் வரை சென்னையில் சாலைகள் மூடப்பட்டிருக்கும் - சென்னை காவல்துறை மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் சுமூகமாக நடைபெற மற்ற போக்குவரத்திற்கு தடை - சென்னை காவல்துறை

சென்னையில், மெரினா பீச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது, அதிவேகத்தில் காற்று வீசும் என்பதாலும், சாலைகளில் செல்வோருக்கு அபாயத்தை விளைவிக்கும் என்பதாலும், வாகன இயக்கத்திற்கு தடை விதிக்கப்படுவதாக, சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த வகையில், சென்னை மெரினா காமராஜர், தலைமைச் செயலகம் இராஜாஜி சாலை, நேப்பியர் பாலத்தை ஒட்டிச் செல்லும், விவேகானந்தர் சாலை, அடையாறு பாலம், திருவான்மியூரிலிருந்து செல்லும் இ.சி.ஆர். சாலை, ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதுடன், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்பு பணிக்குழுவினர், காய்கறி, பால் வண்டி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments