புதுச்சேரி: மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு

0 922
புதுச்சேரி: மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு

நிவர் புயல் இன்று புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாநில பேரிடர் மையத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி ஆய்வு மேற்கொண்டார்.

தகவல் பரிமாற்றம் குறித்து மையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விசாரித்த அவர், புயல் வருவதை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்கவும், பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அளிக்கவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் பொதுமக்கள் அவசர கால மையத்தை தொடர்புகொண்டால் உடனடியாக தொடர்புடைய துறைக்கு தகவல் அளிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments