நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை

0 1435
நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக நீதிமன்றங்களுக்கு இன்று விடுமுறை

நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இன்று  விடுமுறை அளிக்கப்படுவதாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.குமரப்பன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள  சுற்றறிக்கையில் நிவர் புயல் காரணமாக புதன்கிழமை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசின் சார்பில் பொது விடுமுறை அறிவித்து இருப்பதால் அதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments