நிபா வைரஸால் கொல்கத்தாவில் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு என தகவல்

0 352

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ராணுவ வீரர் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்கத்தாவில் பணியமர்த்தப்பட்டிருந்த பாதுகாப்புப் படை வீரரான சீனு பிரசாத், விடுமுறைக்காக சொந்த மாநிலமான கேரளா சென்றுவிட்டு, பணிக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

கடந்த 20ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சீனு பிரசாத்துக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்ததா  என்பதை அறிவதற்காக அவரது, மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பழந்தின்னி வவ்வால்களால் நிபா வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில், இந்த வைரஸ் காரணமாக கேரளாவில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments