ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை - விமானப் போக்குவரத்து அமைச்சகம்

0 348

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க இதுவரை எந்த நிறுவனமும் விருப்பம் தெரிவிக்கவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

33ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் இருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாகக் கூறி மத்திய அரசுக்கு அந்நிறுவனத்தில் உள்ள 76விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இதற்காக விருப்பம் தெரிவிப்போரிடம் இருந்து கோரிக்கைகளை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வரவேற்றுள்ளது. விருப்பம் தெரிவிப்பதற்கான காலக்கெடு மே 14இல் இருந்து மே 31ஆக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியாவை வாங்குவதற்காக இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.என்.சவுபே தெரிவித்துள்ளார். விருப்பம் தெரிவிப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடியும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments