தேர்தல் பிரசாரம் : 3- வது முறையாக உதயநிதி மீண்டும் கைது

0 1600
தேர்தல் பிரசாரம் : 3- வது முறையாக உதயநிதி மீண்டும் கைது

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி, 3 - வது முறையாக மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

"விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் " என்ற தேர்தல் பிரசாரத்தை திருக்குவளையில் துவக்கிய உதயநிதி, ஏற்கனவே 2 முறை கைது செய்யப்பட்டு , விடுவிக்கப்பட்டு இருந்தார்.

3 - வது நாளான இன்று, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் பிரசாரத்தை துவக்கிய உதயநிதி, குத்தாலம் கடை வீதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

முன்னதாக அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த உதயநிதியை, கொரோனா ஊரடங்கு விதிகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதாக கூறி, போலீசார், கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments