பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் -சிபிஐ

0 881
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் -சிபிஐ

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து ஆளுநரே முடிவு செய்யலாம் என்று சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் தமிழக அமைச்சரவை, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இதற்கான முடிவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்னும் எடுக்கவில்லை. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ தரப்பு, பேரறிவாளன் உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் சிபிஐக்கு எந்த விதத் தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments