தமிழகத்தை உலுக்கிய வழக்கு.. 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்ற சம்பவம்.. அரசு தரப்பில் மேல் முறையீடு

0 2162
திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியில் 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தை உலுக்கிய இவ்வழக்கின் மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் கல்யாண சுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விடுதலை செய்யப்பட்ட கிருபானந்தன்ஆடைகளில் இருந்த ரத்த மாதிரியின் டி.என்.ஏ, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் இரத்த மாதிரியின் டி.என்.ஏ சோதனை முடிவுடன் ஒத்து போவதால், கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து கிருபானந்தன் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments