காட்டில் பத்திரமாக விடப்பட்டது 14 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட காட்டு யானை

0 1375
காட்டில் பத்திரமாக விடப்பட்டது 14 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட காட்டு யானை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 14 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண் யானை பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

பஞ்சப்பள்ளி காப்பு காட்டில் இருந்து உணவு தேடி வந்த யானை, வெங்கடாசலம் என்பவரின் விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது. காலை 6 மணியளவில் தொடங்கிய மீட்பு பணி இரவு 8.30 மணி வரை நீடித்தது. 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு, 2 கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் கயிறு கட்டி யானை உயிருடன் மீட்கப்பட்டது.

இந்த நிலையில், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானை, பத்திரமாக மாரண்டஅள்ளி அருகே காப்பு காட்டில் விடப்பட்டது.

மயக்க ஊசி செலுத்தியதின் விளைவாக நேற்றிரவு யானை சோர்வாக காணப்பட்டதாகவும் தற்போது, நலமுடன் இருப்பதாகவும் வனத்துறை தெரிவித்துள்ளது. வனத்துறையின் ஒரு குழுவினர் யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments