அரபிக்கடலில் தொடர்கிறது மலபார் கடற் போர் பயிற்சி; இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய போர் கப்பல்கள் பங்கேற்பு

0 757
மலாபார் கடற்போர் ஒத்திகை இந்தியா, அமெரிக்கா போர் கப்பல்களை மையப்படுத்தி நடைபெற்றது.

மலாபார் கடற்போர் ஒத்திகை இந்தியா, அமெரிக்கா போர் கப்பல்களை மையப்படுத்தி நடைபெற்றது.

அரபிக்கடலில் நடைபெற்று வரும் 4 நாட்கள் பயிற்சியின் மூன்றாவது நாளான இன்று இந்திய விமானம் தாங்கி கப்பலான விக்கிரமாதித்யாவுடன் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான நிமிட்ஸ் இணைந்து கொண்டது.

இந்த இரு கப்பல்களையும் மையப்படுத்தி, இந்திய, ஜப்பான், ஆஸ்திரேலியா கடற்படை கப்பல்களும், போர் விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டன.

நட்பு நாடுகளின் கப்பல் தளத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர்களை போர் காலத்தில் இறக்கி, ஏற்றுவது,கப்பலில் சிக்கிய மாலுமிகளை காப்பது, நட்பு நாட்டு கப்பலை போர் கள சூழலில் காக்க ஆயுத பிரயோகம் செய்வது என முழு அளவிலான பயிற்சியில் நான்கு நாட்டு கடற்படையினரும் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments