தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

0 1836
தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி  மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 12 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments