எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை - முதலமைச்சர்

எதிர்கட்சிகளின் விமர்சனங்களை தவிடுபொடியாக்கி தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எதிர்க்கட்சியாக வருவதற்காவது மு.க.ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் வனவாசியில் நடந்த அரசு விழாவில், 100 ஏரிகளை ரூபாய் 44 கோடியே 43 லட்சம் மதிப்பில் புனரமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 118 கோடியே 93 லட்சம் மதிப்பிலான 44 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். 123 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டி முடிக்கப்பட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். 6ஆயிரத்து832 பயனாளிகளுக்கு 46 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்து, தமிழக அரசு சரித்திர சாதனை படைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
நீர் மேலாண்மை துறையில் தமிழக அரசு பல்வேறு சாதனைகளை செய்ததன் மூலம் ஒரு சொட்டு நீர்கூட வீணாகாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது என்றும், அவர் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தன்னைப்பற்றி நினைத்தால்தான் தூக்கம் வரும் என்று விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, ஒரு வாரம் கூட ஆட்சி தாங்காது என்று அவர் சொன்ன நிலையில் நான்கு ஆண்டுகளை கடந்து அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது என்றார்.
எனது தலைமையில் தமிழக அரசு சாதனை படைப்பதை மு.க.ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை - முதலமைச்சர் #CMEdappadiPalaniswami | #Tamilnadu | #MKStalin | https://t.co/jrRED6EkaE
— Polimer News (@polimernews) November 19, 2020
Comments