மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்புக்கு பாஜகவினர் அழைப்பு

0 671
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று முழு அடைப்புக்கு பாஜகவினர் அழைப்பு

மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று முழுஅடைப்புக்கு பாஜகவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கூச்பெகர் மாவட்டத்தில் காளிபூஜையின் போது திரிணாமூல் காங்கிரஸ்- பாஜக தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. அப்போது பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் காலாசந்த் காமரகர் அடையாளம் தெரியாத சிலரால் தடியால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று திரிணாமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments