பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தடைந்தார்

0 1766
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தடைந்தார்

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 14 நாள் பயணமாக சென்னைக்கு இன்று வந்தார்.   

சென்னை விமான நிலையத்தில் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்  ஜெயக்குமார், பாண்டியராஜன்,தங்கமணி, பெஞ்சமின், கே.பி. அன்பழகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

14 நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணைத் தலைவர், நாளை மறுதினம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஜல் பிரதிக்யா திவாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

20ம் தேதி காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கிலும், 21ம் தேதி நடைபெறும் லால்பகதூர் சாஸ்திரி விருது வழங்கும் நிகழ்ச்சியிலும்  பங்கேற்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments